உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அமைந்து இருக்கும் செல்லியம்மன் கோவிலில் நேற்று முன் தினம் இரவு யாரே மர்ம மனிதர்கள் உண்டியல் உடைத்து பணத்தை திருடி சென்றனர். இதில், நான்காயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் பூசாரி கருப்பையா கொடுத்த புகாரின் பேரில், குன்னம் இன்ஸ்பெக்டர் சோலைமுத்து வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !