உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்குதீர்த்த குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

சங்குதீர்த்த குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

திருக்கழுக்குன்றம்: தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு, திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த குளத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று, 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சங்குதீர்த்த குளத்தில், தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, வருகிற 16ம் தேதி, தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற இக்குளத்தில், சில சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, பாட்டில்களை உடைத்துப் போடுகின்றனர். இரவு நேரங்களில், சிலர் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இவ்வாறாக, பல வகைகளில் குளம் மாசு அடைந்துள்ளது. இந்நிலையில், தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு, குளத்தைத் துாய்மைப்படுத்தும் பணியை, வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம் துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !