உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகரம் சேஷசமுத்திரம் கோவில் தேர் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க முடிவு

அகரம் சேஷசமுத்திரம் கோவில் தேர் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க முடிவு

விழுப்புரம்: சங்கராபுரம் அடுத்த அகரம் சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் மக்கள் கோவில் தேரை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.சங்கராபுரம் அடுத்த அகரம் சேஷசமுத்திரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடத்துவது தொடர் பாக இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்தது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை.இதனையடுத்து, இரு ஆண்டுகளாக தேரோட்டம் நடத்த முடியாத நிலை நிலவுகிறது. கோவில் தேரை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்கப் போவதாக கூறி, சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் மக்கள் நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.அப்போது, அவர்களுடன் வந்த வி.சி., கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், நிருபர்களிடம் கூறியதாவது: சங்கராபுரம் அடுத்த அகரம் சேஷசமுத்திரம் ஆதிதிராவிடர் மக்கள் சார்பில் கோவில் தேரோட்டம் நடத்த, கடந்த 2 ஆண்டுகளாக ஜனநாயக முறை யில் தொடர் போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்க வில்லை.இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததைக் கண்டித்து, கோவில் தேரை ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைக்கவும், இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 79 குடும்பத் தினரும், புத்த கோட்பாடுகளை ஏற்று மதம்மாறிடவும் தீர்மானித்துள்ளனர்.சேஷசமுத்திரம் கிராமத்தில் ஆதிதிராவிட சமூக மக்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டித்து, சங்கராபுரம் பகுதியில் வரும் 10ம் தேதி வி.சி., கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. இதே போல், ஆதி திராவிடர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்து, மாவட் டம் முழுவதும் வரும் 30ம் தேதி மறியல் நடத்தப்படும்.இவ்வாறு சிந்தனைச்செல்வன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !