ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவம்
ADDED :4333 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவப் பெருவிழா துவங்கியது.கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் 77ம் ஆண்டு பிரம்மோற்சவப் பெருவிழா விக்னேஸ்வரர் அனுக்ஞை பூஜையுடன் நேற்று துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் பகலில் சந்திர சேகர் உற்சவம், இரவில் சோமாஸ்கந்தர் உற்சவமும் நடக்கும்.தொடர்ந்து 14ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி, பஞ்ச மூர்த்தி வீதியுலா நடக்கும், 15ம் தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது.தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையினரால் தேவாரம், திருப்புகழ் பஜனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.