உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்தமலை முருகனுக்கு கிருத்திகை பூஜை

ஆனந்தமலை முருகனுக்கு கிருத்திகை பூஜை

ஊட்டி: ஊட்டி அருகே முத்தொரை பாலாடாவில் உள்ள ஆனந்தமலை முருகனுக்கு வரும் 11ம் தேதி கிருத்திகை பூஜை நடக்கிறது. காலை 10:00 மணியளவில் செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜை, ஏழு ஹெத்தையம்மன் தெய்வத்திற்கு ஆராதனை பூஜை, ஆனந்தமலை முருகனுக்கு அபிஷேக பூஜை, நவக்கிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, தஞ்சை அருளாளர் ஆனந்த சித்தரின் அருளுரை, வனிதா குழுவினரின் கலாசார நடனம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ஆசிரியர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !