உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய .. காணிக்கை நாணயங்களை கேட்கிறது இலங்கை!

கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய .. காணிக்கை நாணயங்களை கேட்கிறது இலங்கை!

கொழும்பு: இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு, இலங்கை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நாணயங்களை, இலங்கை அரசு கேட்கிறது. இலங்கை, ரிசர்வ் வங்கியின் கவர்னர், அஜித் சப்ரால் இது குறித்து கூறியதாவது: இலங்கையை சேர்ந்த மக்கள் பலர், தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் பீகாரில் உள்ள, புத்த கயா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழிபடுகின்றனர். இந்த பக்தர்கள், கணிசமான காணிக்கையை, அங்குள்ள உண்டியல்களை செலுத்துகின்றனர். இந்திய வழிபாட்டு தலங்களில், இலங்கை மக்கள், 20 டன் எடை கொண்ட இலங்கை நாணயங்களை, காணிக்கையாக செலுத்தியிருக்கக் கூடும். எனினும் இந்த காணிக்கை குறித்து, மதிப்பிடப்பட வில்லை;  இந்த அளவு நாணயங்களை மீண்டும் தயாரிப்பதற்கு, அதிக செலவாகும்; எனவே, இலங்கை பக்தர்கள், நன்கொடை மற்றும் காணிக்கையாக வழங்கிய நாணயங்களை, இந்திய அரசு  திருப்பித் தரும்படி கோருகிறோம். இவ்வாறு, அஜித் சப்ரால் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !