இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் திருப்பதியில் சுவாமி தரிசனம்!
ADDED :4334 days ago
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். திருமலைக்கு வந்த அவரை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜீ மற்றும் அதிகாரிகள் வரவேற்று, சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தரிசனத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.எஸ்.எல்.வி. - டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும்வகையில், ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்றார்.