சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
ADDED :4334 days ago
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14-ஆம் தேதி மகரஜோதி நடைபெறுகிறது. மகர ஜோதியை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகரஜோதி தரிசனத்துக்கு முன்பு பதினெட்டாம் படி ஏறுவதற்கு பக்தர்கள் கூட்டம் தினசரி அதிகரித்துகொண்டே செல்கிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பிரசாதமாக வழங்கப்படும் அப்பம், அரவணை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.