சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம்
ADDED :4334 days ago
எல்லாபுரம்: கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாளுக்கு சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அதிகாலை சுதர்சன ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், யோகஷேம ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், அபிஷேக தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.