உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, காலை 5 மணி முதல் விசேஷ ஹோமம், அடுத்து மகா அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சியளிக்க அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், புண்யாக வாசனம், ரக்ஷக்ஷ்பந்தனம் மற்றும் ஹோமத்துடன் திருமாங்கல்ய தாரணம், மஹாதீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !