சீதாராம ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4334 days ago
குடியாத்தம்: பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட சீதாராம ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை வரும் ஏப்ரல் மாதம் நடத்த திருப்பணி கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர். தெற்கு முகம் பார்த்த ஆஞ்சநேயர், இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். அனுமன் மூலவராக ஸ்ரீராமபிரானுக்கு இடது புறத்தில் சுமார் 6.5 அடி உயரத்தில், 4 அடி அகலத்தில் ஆஜானுபாகுவாக கம்பீர தோற்றத்தில் உள்ளார். இக்கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் புனரமைப்புப் பணிகள் தொடங்கின. பொதுமக்கள் நிதி உதவியுடன் வரும் சித்திரை (ஏப்ரல்) மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.