உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பிரம்மோத்சவம் தொடக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பிரம்மோத்சவம் தொடக்கம்!

கும்பகோணம்: சாரங்கபாணி கோயிலில் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா ஜன. 6 முதல் ஜன. 15-ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான திங்கள்கிழமை இரவு வெள்ளி இந்திர விமானத்தில் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து, ஜன. 7-ம் தேதி காலை பல்லக்கு வீதி உலாவும், இரவு வெள்ளி சூர்யபிரபையிலும், 8-ம் தேதி இரவு வெள்ளி சேஷவாகனத்திலும், 9-ம் தேதி காலை பல்லக்கு வீதியுலாவும், மாலையில் வெள்ளி கருட சேவையும், 10-ம் தேதி காலை பல்லக்கு வீதிபுறப்பாடும், இரவு வெள்ளி அனுமந்த வாகனத்தில் வீதியுலா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !