பழநி தைப்பூச திருவிழாவுக்கு 450 சிறப்பு பஸ்கள்!
ADDED :4334 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும்15ம் தேதி முதல் 18ம் தேதி வரை மதுரை, திருச்சி, காரைக்குடி, தேனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பழநிக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. போலீசார் மூலம் பாதுகாப்பு பணிக்காக 80 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களை போலீஸ் கட்டுபாட்டு அறை மூலம் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.