திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி
ADDED :4332 days ago
மதுரை: பள்ளி மாணவர்களுக்கு திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டிகள், ஜன.,9,10ல் நடக்கிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.,9ல் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, பத்தாவது முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜன.,10ல் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடக்கின்றன. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஏற்பாடுகளைச் செய்துள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள், மீனாட்சி கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என இணைக்கமிஷனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.