உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்மலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

பொன்மலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சாமி கோவிலில், சஷ்டியை ஒட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், சஷ்டியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் சஷ்டி குழு சார்பில் சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. இதில், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், தயிர், சந்தனம் போன்றவைகளால் அபிஷேக பூஜை செய்தனர். பின்,சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், சஷ்டி குழுவினர் மற்றும் பக்தர்கள் சஷ்டி படித்தனர். தொடர்ந்து, ராஜா அலங்காரம் செய்து, தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !