உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் விழா

ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் விழா

உடுமலை: உடுமலை, சோமவாரப்பட்டியில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவிலில், வரும் 15ம் தேதி முதல் மூன்று நாட்கள் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 15ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், காலை 11.00 மணிக்கு, சிறப்பு பூஜையும், மாலை 6.00 மணிக்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடக்கிறது. 16ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு, சிறப்பு அலங்கார தீபாராதனையும், காலை 11.00 மணிக்கு, சிறப்பு பூஜையும் நடக்கிறது. 17ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜையும், மாலை 6.00 மணிக்கு, மகா அபிஷேகமும், இரவு 7.00 மணிக்கு, மகா தீபாராதனையும், இரவு 9.00 மணிக்கு, சுவாமி வீதியுலா, வாணவேடிக்கையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !