குராயூர் கோயிலில் நாளை மண்டலாபிஷேகம்
ADDED :4332 days ago
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகிலுள்ள குராயூர் வேணுகோபாலசுவாமி கோயில் மண்டலாபிஷேகம், நாளை நடக்கிறது. 600 ஆண்டுகள் பழமை மிக்க இக்கோயிலில், 90 ஆண்டுகளுக்குப் பின் 2012, நவ.,22ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்து அறநிலையத் துறையைச் சேர்ந்த இக்கோயில், மதுரை தண்டாயுதபாணி கோயிலோடு இணைந்தது. குரா மரங்கள் நிறைந்த ஊர் என்பதால் குராயூர் என பெயர் பெற்றது. நாளை காலை 9.00 மணிக்கு திருக்கோஷ்டியூர் லட்சுமி நரசிம்மசுவாமியால் மண்டலாபிஷேகம், யாகம் நடக்கிறது. இத்தகவலை டிரஸ்டி எஸ்.வெங்கட்ராமன் தெரிவித்தார்.