உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தோணியார் தேர்த்திருவிழாவுக்கு ஜன., 17ல் கொடியேற்றம்

அந்தோணியார் தேர்த்திருவிழாவுக்கு ஜன., 17ல் கொடியேற்றம்

சேந்தமங்கலம்: புனித வனத்து அந்தோணியார், சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா, ஜனவரி, 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளத்தில், புனித வனத்து அந்தோணியார் மற்றும் புனித வனத்து சின்னப்பர் தேவாலயம் உள்ளது. இவ்வாலயத்தில், இந்த ஆண்டு தேர்த்திருவிழா, வரும், 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, 5.30 மணிக்கு, கொசவம்பட்டி பங்குதந்தை மரிய ஜோசப்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. 18ம் தேதி மாலை, 5.30 மணிக்கு, சென்னை அசோக்நகர் பங்குதந்தை ஆண்டனிதாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு வேண்டுதல் தேர் இழுத்தல், 9.30 மணிக்கு மின் அலங்கார தேர்பவனியும் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில், புனித வனத்து அந்தோணியார் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். ஜனவரி, 19ம் தேதி மாலை, 5 மணிக்கு, சேலம் மறைமாவட்ட பள்ளிகள் மேலாளர் ஜான் கென்னடி தலைமையில் திருப்பலியும், இரவு, 7 மணிக்கு கொடியிறக்கம், இறை ஆசீரும் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !