உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்மலை கோவிலில் தைப்பூசத்திருவிழா

பொன்மலை கோவிலில் தைப்பூசத்திருவிழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூசத்திருவிழா வரும் 10ம் தேதி துவங்குகிறது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தொ டங்கி மூன்று நாள் தே ரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வரும் 10ம் தேதி தைப்பூசத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 16ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, தைப்பூசத்தன்று (17ம் தேதி) மாலை 4.00 மணிக்கு முதல்நாள் தேரோட்டம் தேர் வடம் பிடித்து இழுத்து வந்து, சிவலோகநாதர் கோவில் அருகே நிறுத்தப்படுகிறது. இரண்டம் நாள் தேரோட்டம் 18ம் தேதி பிற்பகல் 3.00 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுத்து வந்து மலையின் வாயு மூலையில் நிறுத்தப்படுகிறது. பின், மூன்றாம் நாள் தேரோட்டம் 19ம் தேதி பிற்பகல் 3.00 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுத்து வந்து பொன்மலை வேலாயுதசாமி கோவில் முன்பு நிலை நிறுத்தப்படுகிறது. இந்த மூன்று நாள் தேரோட்டத்தில், பக்தர்களுக்கு அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் வழக்கம்போல் உபயதாரர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை செயல் அலுவலர் வெண்மணி, பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !