உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டிச்சென்ற பக்தர்கள்

மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டிச்சென்ற பக்தர்கள்

வால்பாறை: வால்பாறையிலிருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு, பக்தர்கள் இருமுடி கட்டி ஊர்வலமாகச்சென்றனர். வால்பாறை கக்கன்காலனி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல, கடந்த மாதம் 22ம் தேதி மாலை அணிந்தனர். தொடர்ந்து 21 நாட்கள் விரதத்திற்கு பிறகு, நேற்று காலை மேல்மருவத்தூர் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. பின்னர் பக்தர்கள் இருமுடி கட்டி, நகர் வழியாக ஊர்வலமாக புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றனர். வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும் 420 பக்தர்கள் வாகனங்களில் மேல்மருவத்தூருக்கு பயணம் செய்தனர். ஏற்பாடுகளை வார வழிபாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துமாரிதங்கம், துணைத்தலைவர் ஆனந்தகுமார், பொருளாளர் பால்துரை உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !