திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாவை விழா
திருவாரூர்: திருவாரூர் தியாக ராஜர்கோவில் தேவாசியமண்டபத்தில் நடந்த மாவட்ட அளவிலான பாவை விழா குறித்த போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பாவை விழா திருவாரூர் தியாகராஜர் கோவில் தேவாசிரிய மண்டபத்தில் நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவராம்குமார் தலைமை தாங் கினார். செயல் அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று நிலை களி ல் நடந்த பாவை நோம்பு தலைப்பிலான கட்டுரைப்போட்டியும், திருப்பாவை மற்றும் திருவெம்பாவை இல் உள்ள 60 பாடல்கள் ஒப்பு வித்தல் போட் டியில் மாணவர்கள்பங்கேற்று பாடல்களை ஒப்பு வித்தனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் பிற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புலவர் விவேகானந்தம் தலைமையிலான நடுவ ர்கள் தேர்வு செய்தனர்.