தீவனூர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED :4316 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனூர் பெருமாள் கோவிலில் இன்று காலை சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர், முன்னூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அருளாள பெருமாள் மற்றும் தீவனூர் ஆதிநாராயண பெருமாள் என்கிற லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவிலில் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.