உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி அடிவாரம், கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநி அடிவாரம், கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநி: பழநியில் தைப்பூச விழாவை முன்னிட்டு, கிரிவீதி மற்றும் அடிவாரம், சன்னதிவீதிகளிலிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பழநியில் தைப்பூசவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கிரிவீதி, பாதவிநாயகர்கோயில், சன்னதிவீதிகளில், பக்தர்களுக்கு இடையூறாக, தள்ளுவண்டியில், பழங்கள், பேன்சிபொருட்கள், பூஜைப்பொருட்களை நடுரோட்டில் வைத்து பக்தர்களுக்கு இடையூறு செய்தனர். இதன்காரணமாக, தேவஸ்தானம், நகராட்சி சார்பில் மேற்கண்ட இடங்களிலிருந்த, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து, சன்னதிவீதி, கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்தாலும், மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடரத்தான் செய்கிறது. நகராட்சி, தேவஸ்தானம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !