உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை திருநாளில் விநாயகருக்கு தேரோட்டம்!

தை திருநாளில் விநாயகருக்கு தேரோட்டம்!

ஆனைமலை: ஆனைமலை அடுத்த சோமந்துரை சித்தூர் கிராமத்தில் தை மாதத்தில் முதல் நாள் முழு முதற் கடவுளான விநாயகருக்கு தேர்திருவிழாக் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமம் சோமந்துரைசித்தூர். இங்கு 300 ஆண்டுகள் பழமையான சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருவது சிறப்பான ஒன்றாகும்.பிள்ளையார் பட்டி , ஈச்சனாரி கோவில்களில் உள்ள தங்கத் தேர்கள் கோவில் பிரகாரங்களில் மட்டுமே உலா வருகிறது. கார்த்திகை மாதம் ஜோதி அன்று, கோவிலில் மாலை 6:00 மணிக்கு விநாயகர் புராணம் படித்து, தேர்த் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தை முதலான நேற்று காலை வரை தினந்தோறும் விநாயகர் புராணம் படிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கோவிலில் கொடியேற்றப்பட்டது. இரவு இங்குள்ள நல்லதண்ணீர் கிணற்றில் இருந்து மண் எடுத்து"பிடி மண் பிள்ளையார் செய்யபட்டது, அந்த பிள்ளையாருக்கு தொடந்து மூன்று நாட்கள் பூஜை நடந்தது . பொங்கல் சோற்றுடன், வெட்டப்பட்ட பூசணி காயை கலந்து, தேர் வலம் வரும் வீதிகளில் வீசப்பட்டது. இதை தொடந்து 3 நாட்கள் காலை,மாலை பூஜை நடந்தது. தொடந்து நேற்று காலை ஐம்பொன்னால் செய்யபட்ட உற்சவ மூர்த்திக்கு ஊர் முக்கிய பிரமுகர்கள் வீட்டில் இருந்து சீர்தட்டுகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டபின் உற்சவ மூர்த்திதேரில், நிலை நிறுத்தபட்டு திருவீதி உலா தொடங்கியது . இதை தொடந்து மாலை ஆறுமணி வரை தேர் திருவீதிஉலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !