உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பத்திருவிழாவையொட்டிஇன்று போக்குவரத்து மாற்றம்!

தெப்பத்திருவிழாவையொட்டிஇன்று போக்குவரத்து மாற்றம்!

மதுரை: மதுரையில், தெப்பத் திருவிழாவையொட்டி இன்று (ஜன.,16) மதியம் ஒரு மணி முதல் தெப்பக்குளம், காமராஜர் ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் அறிக்கை:காமராஜர் ரோட்டில், குருவிக்காரன் சாலை சந்திப்புக்கு அப்பால் தெப்பக்குளம் வரை எந்த வாகனமும் செல்லக்கூடாது. அண்ணாநகரில் இருந்து தெப்பக்குளம் இடையே உள்ள பாலத்திலும் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. காமராஜர் ரோட்டில் இருந்து ராமநாதபுரம் ரோடு செல்லும் வாகனங்கள், குருவிக்காரன் ரோட்டில் திரும்பி, ஆவின் சந்திப்பு வழியாக சிவகங்கை ரோடு திரும்பி, ரிங்ரோடு வழியாக செல்ல வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வரும் வாகனங்கள், விரகனூர் ரிங்ரோடு சந்திப்பு வந்தபின், தெப்பக்குளம் வர அனுமதியில்லை. அவர்கள் ரிங்ரோட்டில் இருந்து வேறு வழியாக மதுரைக்குள் வரவேண்டும். தெப்பத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை, வைகை ஆற்றின் தென்கரைபகுதி, புது ராமநாதபுரம் ரோடு, நியூபங்கஜம் காலனி, தியாகராஜர் காலனி, வெங்கடபதி அய்யர் சந்து பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம். விரகனூர் ரிங்ரோடு பகுதியில் இருந்து தெப்பக்குளம் வரும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை, ஐராவதநல்லூர் முன்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும். சோதனைச் சாவடியை தாண்டி வரஅனுமதி கிடையாது, என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !