உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தரின மக்கள் கொண்டாடிய "கம்பட்டராயன் பண்டிகை

கோத்தரின மக்கள் கொண்டாடிய "கம்பட்டராயன் பண்டிகை

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள சில கிராமங்களில், கோத்தர் மக்களின் "கம்பட்டராயன் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும், டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் சாமை அரிசி பொங்கல் வைத்தும், கலாச்சார உடை அணிந்தும், கோத்தரின ஆதிவாசி மக்கள், கம்பட்டராயன் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பண்டிகை கடந்த 14, 15ம் தேதிகளில், கொல்லிமலை மற்றும் திருச்சிகடி கிராமங்களில் கொண்டாடப்பட்டது. இதில், கோத்தகிரி மக்கள் கலாச்சார உடையணிந்து, பொங்கல் வைத்தும் தங்களின் பராம்பரிய விழாவை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, ஆண்களின் மூன்று வகை நடனமும், பெண்களின் மூன்று வகை நடனமும் இடம்பெற்றது. திருச்சிகடி கிராமத்தில், "அட்குப்ஸ் உடை அணிந்து, ஆண்கள் ஆடிய கலாச்சார நடனம் அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக, பெண்கள் தெய்வீக பாடல்களை பாடினர். இதுகுறித்து திருச்சிகடியை சேர்ந்த புஷ்பகுமார், கூறுகையில் "" இந்தபண்டிகையின் போது, கோவில் முன்பு குடில் அமைத்து நாங்கள் அனைவரும் தங்கி பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம். இதில், சாஸ்திரங்களின் அடிப்படையில் 7பேர் இணைந்து 100கிலோ கொண்ட கல்லை தூக்கும் வழக்கம் தற்போதும் உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !