கோவிலில் பூ குண்டம் விழா
கோத்தகிரி: கோத்தகிரி நெடுகுளா ஜெடையசுவாமி கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. கிராம ஜெடையசுவாமி கோவிலில் அதிகாலை 1.00 மணிக்கு, ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அங்கிருந்து ஐயனை மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கோவிலில் பஜனை, ஆடல், பாடல் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு பூங்குண்டம் இறங்கும் நடந்தது. தொடர்ந்து, ஐயனுக்கு நடந்த நேர்த்திக்கடனை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு, மலைக்கோவிலில் இருந்து ஐயன் மீண்டும் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்துவரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக நேற்று, கோவிலில் மண் பானையில் தண்ணீருடன் வெண்ணெயை கலந்து, கொதிக்க வைத்து, அதிலிருந்து வெளிவரும் பசையை நெற்றியில் திலகமிடும் (கப்பிடுதல்) நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு, திலகமிடுவதால், மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது ஐதீகமாக உள்ளதால், பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.