உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை சங்கமேஸ்வரர் தேர் ஊர்வலம்

கோட்டை சங்கமேஸ்வரர் தேர் ஊர்வலம்

கோவை: கோவையில் இன்று காலை முதல் மதியம் வரை நடக்கும் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஊர்வலத்தை முன்னிட்டு, போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் ஊர்வலம் இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்கிறது. தேர் ஊர்வலத்தை முன்னிட்டு மாநகர பகுதியில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:தேர் ஊர்வலத்தை முன்னிட்டு, காலை 10.00 முதல் மதியம் 1.00 மணி வரை அவிநாசி ரோடு பழைய மேம்பாலம், புரூக்பாண்ட் ரோடு மற்றும் திருச்சி ரோட்டில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பெரியகடை வீதி வழியாக உக்கடம், பாலக்காடு ரோடு செல்ல அனுமதியில்லை. இதற்கு பதிலாக, திருச்சி ரோடு வழியாக கிளாசிக் டவர், வாலாங்குளம் பைபாஸ் ரோடு மூலம் உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.திருச்சி ரோட்டிலிருந்து பெரியகடை வீதி, மணிக்கூண்டு, டவுன்ஹால் வழியாக செல்லும் அனைத்து ரக வாகனங்களும் கிளாசிக் டவர், வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். என்.எச்., ரோட்டிலிருந்து டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும், ஐந்து முக்கு வழியாக ராஜவீதி அடைந்தும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும் உக்கடம் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் லங்கா கார்னர், திருச்சி ரோடு, கிளாசிக் டவர், வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இதர வழித்தடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ளது போல் வழக்கமாக செல்லலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."இன்று காலை முதல் மதியம் வரை நடக்கும் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர் திருவிழா பாதுகாப்பு பணியில், 800 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என, மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !