உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை மாரியம்மன் கோவில் விழா துவக்கம்

வால்பாறை மாரியம்மன் கோவில் விழா துவக்கம்

வால்பாறை: வால்பாறை டவுன் எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில் 30ம் ஆண்டு திருவிழா, நேற்று காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை தாசில்தார் பாலகிருஷ்ணன் ஏற்றினார். முன்னதாக அம்மனுக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் செய்யப்பட்டது. வரும் 21ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்திகும்பம் எடுத்து வரப்படுகிறது. வரும் 22ம் தேதி காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மதியம் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது.விழாவில் வரும் 23ம் தேதி, மாலை 5.30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பூவோடு எடுத்துவந்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !