கணவன், மனைவி ஒற்றுமை சிறக்க எந்தவிரதம் மேற்கொள்ளலாம்?
ADDED :4319 days ago
தம்பதியர் ஒற்றுமையில் முக்கிய இடம் வகிப்பதேவீட்டின் ஆட்சியைப் பொறுத்து தான். மதுரை மீனாள் இந்தகேள்வியைதகேட்கிறீர்கள். உங்கள் வீட்டில் அம்மன் ஆட்சியா? சிதம்பரம் என்றால் ஆண் ஆதிக்கம், மதுரை என்றால் பெண் ஆதிக்கம் என்று விளையாட்டாகச் சொல்வது வழக்கம். ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் மறைந்து, எந்தவிஷயமாக இருந்தாலும், இருவரும் பரஸ்பரம் பேசி முடிவெடுத்தால் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. இது தான் முதல் விரதம். மற்றபடி, திங்களன்று விரதம் இருந்து சிவன் கோயிலில் சோமாஸ் கந்தரை வழிபடுவதும், சனியன்று விரதமிருந்து லட்சுமி நாராயணரை வழிபடுவதும் தம்பதி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.