பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்!
ADDED :4317 days ago
பேரூர்: கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவிலில், தைப்பூசலம் தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. தைப்பூசத்தையொட்டி, நேற்று காலை, 6:30 மணிக்கு, பால தண்டபாணி சுவாமிக்கும், உற்வச மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டது. காலை, 8:00 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் விநாயகர், முருகன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதன்பின், பேரூரில் உள்ள தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதிகளின் வழியே, தேர் உலா வந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரில் எழுந்தருளிய சுவாமியை தரிசனம் செய்தனர். காலை, 10:15 மணிக்கு தேர்நிலை வந்தடைந்ததும், கொடியிறக்கம் நடந்தது. இதன் பின், சிறப்பு அபிஷேகத்துடன், தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.