மாங்காடு காமாட்சி தெப்ப திருவிழா இன்று நிறைவு!
ADDED :4317 days ago
மாங்காடு: காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மூன்று நாள் தெப்ப திருவிழா, இன்றுடன் நிறைவுபெறுகிறது.தைப்பூச தினத்தையொட்டி, மாங்காடு காமாட்சி அம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் வகையறா திருக்கோவில்கள் சார்பில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. நேற்று முன்தினம், வெள்ளீஸ்வரர் மற்றும் காமாட்சி அம்மன், கோவில் தெப்பத்தில் எழுந்தருளினர். நேற்று, கிளி வாகனத்தில், அம்மன் வீதி உலா நடைபெற்றது.இறுதி நாளான இன்று மாலை, 6:30 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியரும், காமாட்சியம்மனும், தெப்பத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.