முருகன்கோயிலுக்கு வேல் காணிக்கை!
ADDED :4317 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரை சேர்ந்தவர் சிவதாணுபிள்ளை. விஞ்ஞானியான இவரது தலைமையில்தான் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. முருக பக்தரான இவர் வேளிமலை குமாரகோயிலிலுக்கு தைப்பூசத்தையொட்டி ஏழே முக்கால் அடி வேல் காணிக்கையாக வழங்குவதாக கூறியிருந்தார். திருச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் இரண்டு லட்சம் ரூபாய் செலவில் வேல் தயாரித்தார். இந்நிலையில் சிவதாணுபிள்ளை திடீர் என்று ரஷ்யா சென்றதால், அவரது சார்பில் குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு மைய ஆய்வாளர் டாக்டர் பத்மனாபன் இந்த வேலை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.