உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆல்கொண்டமால் கோவிலுக்கு 29 கன்றுகள் தானம்

ஆல்கொண்டமால் கோவிலுக்கு 29 கன்றுகள் தானம்

உடுமலை: உடுமலை சோமவாரப்பட்டியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவிலில், திருவிழா கடந்த 15 ம் தேதி துவங்கியது. 16 ம் தேதி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், திருவிழாவில் பங்கேற்று ஆல்கொண்டமாலை தரிசித்தனர். நேற்று இரவு திருவீதியுலா மற்றும் வாண வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவையொட்டி, பொங்கலன்று ஈன்றெடுக்கும் கன்றுகளை பக்தர்கள் கோவிலுக்கு தானமாக வழங்கினர். இவ்வாறு, 29 கன்றுகள், 3 ஆடுகள் மற்றும் ஒரு சேவல் தானமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !