அலகுமலையில் தேரோட்டம்
ADDED :4318 days ago
பொங்கலூர்: பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று தைப்பூச தேரோட்டம் நடந்தது. அலகுமலை முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் ஆனந்தன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். கைலாசநாதர் கோவிலில் இருந்து விநாயகர் தேர் புறப்பட்டது. அதன்பின், முத்துக்குமார பாலதண்டாயுதபாணி தேரை , பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6.00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தைப்பூச திருவிழாவையொட்டி குளத்துபாளையம் கனககிரி மலையில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா, அன்னதானம் ஆகியன நடந்தன.