தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேரோட்டம்
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழா நடந்தது. பால், பன்னீர், இளநீர் காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து வழிபட்டனர். அபிஷேகம், ஆராதனை மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. உற்சவருடன் மலைக்கோயிலில் தேரோட்டத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். சுற்றுப்புற கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில், நேற்று முருகப்பெருமான் தங்க கவசத்தில் காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டனர். பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலிலும், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மேல்மலை கிராம பக்தர்கள் வழிபட்டனர். கன்னிவாடி: தைப்பூசத்தை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது.
* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், மல்லீஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி ஊராட்சி திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் நடந்தது. ஆராதனையும், பூஜைகளும் நடந்தது. கோயில் பரம்பரை தக்கார் அழகுலிங்கம், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி, ஊராட்சித்தலைவர்கள் மணி, மகேஸ்வரி மணிமாறன் <உட்பட பலர் கலந்துகொண்டனர். திராளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் வேல்முருகன் செய்திருந்தார்.