கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் தைப்பூசத் திருவிழா
ADDED :4319 days ago
கூடலூர்: கூடலூர் சுந்தரவேலவர் திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுருளிமலை-பழநி மலை பாதயாத்திரை குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது. *குமுளி மலைப்பாதையில் உள்ள லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, பாலாபிஷேகம் செய்தனர். வழிவிடும் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.