உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் தைப் பூச விழா

செஞ்சியில் தைப் பூச விழா

செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழாவில் பக்தர்கள் அலகு குத்தி லாரிகளில் தொங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.செஞ்சிக்கோட்டை கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் சுப்ரமணியர் கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. காலை சுப்ரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் காவடி எடுத்தும், தேர் இழுத்தும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். அலகு குத்திய பக்தர்கள் லாரிகளையும், டிராக்டர்களை இழுத்தும், லாரிகளில் தொங்கிபடியும் வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !