உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சிற்றம்பலம் முருகப்பெருமான் கோவிலில் தைப்பூச காவடி திருவிழா

திருச்சிற்றம்பலம் முருகப்பெருமான் கோவிலில் தைப்பூச காவடி திருவிழா

வானூர்: வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15ம் ஆண்டு தைப்பூச காவடி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.திருச்சிற்றம்பலம் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா 17ம் தேதி காலை 7.30 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 9.00 மணிக்கு வரசித்தி விநாயகர் கோவிலில் காவடி எடுத்த செல்லப்பட்டது. காலை 10.00 மணிக்கு காவடி அபிஷேகமும், 10.25க்கு பம்பை, மேளவாத்தியம் முழங்க காவடி ஆடியவாறு பக்தர்கள் விநாயகர் கோவிலில் இருந்து முருக பெருமான் கோவிலுக்கு சென்றனர். பகல் 12.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனை நடந்தது.மாலை 6.00 மணிக்கு வள்ளலாரும், முருகப்பெருமானும் தலைப்பில் நாடக மாமணி பேராசிரியர் வேட்டவராயன் குழுவினர் இன்னிசை சொற்பொழிவு நடதப்பட்டது. இரவு 8.00 மணிக்குஇடும்பன் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !