திண்டல் முருகன் கோவிலில் தைப்பூசம்!
ADDED :4315 days ago
தைப்பூசத் திருவிழாவையொட்டி ஈரோடு அருகே திண்டலில் உள்ள வேலாயுதசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர். மூலவர் முருக பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காவிரியில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.