/
கோயில்கள் செய்திகள் / உயிர் பலி இல்லா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: போலீசார் கிடா வெட்டி நேர்த்திக்கடன்!
உயிர் பலி இல்லா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: போலீசார் கிடா வெட்டி நேர்த்திக்கடன்!
ADDED :4313 days ago
அலங்காநல்லூர்: பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், உயிர் பலி இல்லாததால், போலீசார் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி விருந்து அளித்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் உட்பட, பல தரப்பினருக்கும் காயங்கள், உயிர் பலி ஏற்படுவது வாடிக்கை. உயிர் பலி ஏற்படாதபட்சத்தில், ஊரில் காலரா போன்ற அசம்பாவிதங்கள் நிகழும் என்ற எண்ணமும் மக்களிடம் நிலவியது. தற்போது ஐகோர்ட் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு நடப்பதால், அதிக காயங்கள், உயிர் பலி இல்லாமல் நடக்கிறது. மக்கள் நலன் கருதி, உயிர் பலி இல்லாத ஜல்லிக்கட்டு நடத்த உதவிய முனியாண்டிசுவாமி கோவிலில், அலங்காநல்லூர் போலீசார் சார்பில், கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது.