மன்னார்சாமி கோவில் திடலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
ADDED :4311 days ago
திண்டிவனம்: திண்டிவனம் மன்னார்சாமி கோவில் திடலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண கமிட்டி சார்பில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவையொட்டி சாமி சிலைகள் உற்சவ திடலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மாலை 6 :30 மணிக்கு மகா திருமஞ்சனம் நடந்தது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.