உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் ஜன.25ல் திருக்கல்யாண மகோற்சவம்!

திருக்கோஷ்டியூரில் ஜன.25ல் திருக்கல்யாண மகோற்சவம்!

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீகோதைநாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண மகோற்சவம் நாளை துவங்குகிறது. நாளை மாலை ஆண்டாள், பெரியசன்னதியில் எழந்தருளுவார். தொடர்ந்து, இரவில் பெரியபெருமாளிடம் பிரியாவிடை பெற்று, திருப்பாவை வியாக்யானத்துடன் பிரமோற்சவம் துவங்கும். தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவத்தில்,அடுத்த மூன்று நாட்களில், ஆண்டாள் தைலக்காப்பு மண்டபத்தில் எழுந்தருளல்,தைலம் திருவீதி உலா, தைலம் சாத்துதல்,ஆண்டாளுக்கு நவகலச அலங்காரம், உச்சிக்கொண்ட சேவை, மணவாளமாமுனிகள் கோதை நாச்சியார், ஆண்டாள் தைலக்காப்பு மண்டபத்தில் எழுந்தருளி,முத்துக்குறி பார்த்தல் நடைபெறும். பின்னர்,ஐந்தாம் நாளான, ஜன.,29ல் இரவு சவுமியநாராயணப் பெருமாளுக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து தங்கப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !