ஈச்சனாரி மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4300 days ago
குறிச்சி: ஈச்சனாரி மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஈச்சனாரி அருகேயுள்ள மகாலட்சுமி கோவிலின் 12 ஆண்டுகள் நிறைவு முன்னிட்டு, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், யாக சாலை பூஜையுடன் துவங்கியது. முதல் மற்றும் இரண்டாம் கால பூஜைக்கு பின், நேற்று காலை 6.00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை நடந்தது. இதையடுத்து, காலை 7.30 முதல் 9.00 மணிக்குள், கோபுரங்களுக்கு கும்பாபிஷேகத்தை, ஜகத்குரு பத்ரி ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் நடத்தி வைத்தார். தொடர்ந்து, பிரசாதம் வழங்குதல், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன்களை வழிபட்டுச் சென்றனர். இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.