சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி!
ADDED :4357 days ago
சிதம்பரம்: குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக வெள்ளித் தட்டில் தேசியக் கொடியை வைத்து சிவகாமசுந்தரி சமே நடராஜருக்கு சிறப்பு ஆராதனை செய்து தீட்சிதர்கள் மேள தாளத்துடன் கோபுர உச்சியில் தேசியக் கொடியை ஏற்றி, பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.