உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்தீஸ்வரர் கோயில் குளம் வறண்டது!

அகத்தீஸ்வரர் கோயில் குளம் வறண்டது!

நாபளூர்: அகத்தீஸ்வரர் கோயில் குளம் முறையாக பராமரிக்காததால் வறண்டுவிட்டது. மேலும் குளத்தில் ஆடுகள், மாடுகளின் புகலிடமாக மாறி வருகிறது. திருவாலங்காடு நாபளூர் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகம் முன் உள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் புத்திர பாக்கியம், திருமண தடை நீங்க பெண்கள் குளத்தில் புனித நீராடி பைரவருக்கு சிறப்பு பூஜை நடத்துவது ஐதீகம். சரியாக பராமரிக்காததால் தற்போது இந்த குளம் விளையாட்டு மைதானமாகவும், ஆடுகள், மாடுகளின் கொட்டகையாகவும் மாறியுள்ளது. இக்குளத்தை சரியாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !