உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தவாரிக்கு வரும் சாமிகளுக்கு சாரத்தில் 13ம் தேதி வரவேற்பு!

தீர்த்தவாரிக்கு வரும் சாமிகளுக்கு சாரத்தில் 13ம் தேதி வரவேற்பு!

புதுச்சேரி: சாரம் மாசி மக வரவேற்பு குழு சார்பில், 25ம் ஆண்டு வரவேற்பு விழா, வரும் 13ம் தேதி நடக்கிறது.மாசி மகத்தை முன்னிட்டு, கடல் தீர்த்தவாரிக்கு புதுச்சேரிக்கு வரும் செஞ்சி ரங்கநாதர், தீவனூர் விநாயகர், மயிலம் சுப்பிரமணிய சுவாமிகளுக்கு, ஆண்டு@தாறும் சாரம் சுப்பிரமணியர் கோவிலில் பூரண கும்ப மரியாதையுடன் வர@வற்பு அளிக்கப்படும்.இந்த ஆண்டு, வரும் 13ம் தேதி கடல் தீர்த்த வாரிக்கு வரும் செஞ்சி ரங்கநாதர், மயிலம் முருகர், தீவனூர் விநயாகர் ஆகிய சுவாமிகளுக்கு, சாரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சாரம் மாசிமக வரவேற்பு குழு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, தலைவர் ஆதிகேசவன், செயலாளர் ரவி, பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்@டார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !