காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் வனபோஜன உற்சவம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வனபோஜன உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வனபோஜனம் உற்சவம் நடைபெற்றது. இதில், காலை 5.00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் வரதராஜபெருமாள்,சதாவரம் மற்றும் சின்னயங்குளம் வழயாக ஒரிக்கை பகுதியில் உள்ள பாலாற்றில் பகல் 2.00 மணிக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், மாலை 5.00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கிருந்து, களக்காட்டூர் கிராமத்தில் உள்ள கரிய மாணிக்கவரதர் சன்னதியில் மற்றும் தேசிகர் சன்னதியில் எழுந்தருளினார். முன்னதாக, பாலாற்றில் நடைபெற்ற வனபோஜன உற்சவத்தில், அப்பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்வதற்காக பாலாற்றில் குவிந்தனர்.