மதுரையில் பிப்.7,8ல் ஆன்மிக சங்கம விழா!
மதுரை:மதுரை தமுக்கத்தில் ஆன்மிக சங்கம விழா பிப்.7,8ல் நடக்கிறது. பிப்.7, மதியம் 2.30க்கு தாராபுரம் சிவா குழுவினரின் மங்கள இசை, 3.30க்கு திண்டுக்கல் ஸ்ரீஹரி நாட்டியாஞ்சலி குழுவின் நாட்டியம், மாலை 4.45க்கு சுசித்ராவின் ஹரிகதை நடக்கிறது. மாலை 6.00க்கு திருக்குறுங்குடி, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்குகின்றனர். 6.45க்கு ஸ்ரீமன் நாராயணனின் நவரசங்கள் என்னும் தலைப்பில், ஸ்ரீரங்கம் மாதவாசாரியார், கே.பி.தேவராஜன், லட்சுமி நரசிம்மன், அனந்த பத்ம நாபாசாரியார், ஸ்ரீரங்கம் பத்ரி நாராயண பட்டர், திருப்பதி ஸ்ரீதர் ஆச்சாரியா உபன்யாசம் நடக்கிறது.பிப்.8, காலை 8.30க்கு சுதர்சன மகா யக்ஞம், பகல் 2.30க்கு வீரமணி கண்ணனின் நாம கீர்த்தனம், 3.45க்கு வெங்கட கிருஷ்ணன் தலைமையில், திருமாலின் திருத்தலங்கள் புனிதம் பெற காரணம் மகரிஷிகளா, ஆழ்வார்களா, ஆச்சாரியார்களா என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. மாலை 5.30க்கு பஜனை, இரவு 7.30க்கு பக்தி மெல்லிசை நடக்கிறது. முக்திநாத் அறக்கட்டளை, ஸ்ரீடிராவல்ஸ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளனர். நுழைவுக்கட்டணம் ரூ. 25.