காஞ்சி விஜயராகவப்பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்!
ADDED :4269 days ago
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவப்பெருமாள் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியில், பிரசித்தி பெற்ற விஜயராகவப்பெருமாள், மரகதவள்ளி தாயார் கோவில் அமைந்துள்ளது. இங்கு,தை அமாவாசையை முன்னிட்டு மூன்று நாள் தெப்ப உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. இதில் கோவிலின் முகப்பில் உள்ள ஜடாயு புஷ்கரணியில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 7:00 மணிக்கு, விஜயராகவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.